சீனா மட்டுமின்றி உலகை அச்சுறுத்தி வரும் 'கோவிட்-19' வைரஸின் தாக்கம், இந்திய தொழிற்சாலைகளில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்து, தொழிற்துறை பிரதிநிதிகளிடம் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆலோசனை செய்தார்.
இதன்பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது, ' கோவிட்-19 வைரசால் இந்திய தொழிற்துறையில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் குறித்து, நாளை பல்வேறு துறை செயலர்களிடம் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெறும். கோவிட்-19 வைரஸ் எதிரொலியால், இதுவரை இந்தியாவில் விலைவாசி உயர்வு ஏற்படவில்லை.