ஏர் இந்தியா நிறுனத்தின் பெரும்பாலான பங்குகளை விற்க மத்திய அரசு 2018ஆம் ஆண்டு முடிவு செய்து ஏலத்தைவிட்டது. ஆனால், பங்குகளை வாங்க யாரும் முன்வரவில்லை என்று தெரிகிறது. இந்நிலையில், நிதிச்சுமையால் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்தின் முழு பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து, முதற்கட்ட ஏலத்திற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
தனியார்மயமாகும் ஏர் இந்தியா நிறுவனம்? - privatisation of air india
டெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தின் முழு பங்குகளை விற்க முடிவு செய்து ஏலத்திற்கான ஒப்பந்தத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
![தனியார்மயமாகும் ஏர் இந்தியா நிறுவனம்? Air India](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5855706-898-5855706-1580105467276.jpg)
Air India
58,000 கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கும் ஏர் இந்தியா நிறுவனத்திற்கு ஆயிரக்கணக்கான ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்பட்டது. இதை சரிசெய்யும் வகையில், இதன் பங்குகளை விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 17ஆம் தேதிக்குள் ஒப்பந்தத்திற்கான ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: யோகி ஆதித்யநாத்துக்கு எதிராகப் புகார் அளிக்கவுள்ள பிரியங்கா காந்தி