தமிழ்நாடு

tamil nadu

கார் ஓட்ட இனி ஸ்கூல் போக வேண்டாம்

By

Published : Jun 19, 2019, 11:56 AM IST

டெல்லி: வாகனங்களை ஓட்ட தேவைப்படும் குறைந்தபட்ச கல்வித்தகுதியை நீக்க மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது.

வாகனங்களை ஓட்ட தேவைப்படும் குறைந்தபட்ச கல்வித்தகுதியை நீக்க மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் முடிவு செய்துள்ளது

22 கோடி ஓட்டுனர்களை உள்ளடக்கியிருக்கும் இந்திய போக்குவரத்துத் துறை தற்போது வாகன ஓட்டிகள் போதுமான அளவு இல்லாததால் தேக்கமடைந்துள்ளது. இந்தியாவில் மோட்டார் வாகனச் சட்டம் 1989படி தற்போது வாகனங்களை ஓட்டுவதற்கான ஓட்டுனர் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித் தகுதியாக எட்டாம் வகுப்பைக் கண்டிப்பாக முடித்திருக்க வேண்டும்.

சமீபத்தில் பேக்குவரத்துத் துறை அமைச்தகத்தின் கூட்டத்தில் ஹரியானா அரசு ஓட்டுனர் உரிமம் பெற இருக்கும் குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தது. ஹரியானாவில் பலரும் வாகனம் ஓட்டுவதற்கான தகுதி திறமைகள் இருந்தும் கல்வித் தகுதியால் கோடிக்கணக்கனோர் வேலையிழப்பதாக தெரிவித்திருந்தனர்.

இதை கருத்தில்கொண்டும், அதிகரித்து வரும் வேலை வாய்ப்பின்மையைக் குறைக்கவும் மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சகம் ஓட்டுனர் உரிமம் பெற தேவையான குறைந்தபட்ச கல்வித் தகுதியை நீக்கவுள்ளதாக தற்போது அறிவித்துள்ளது. இதன் மூலம் பள்ளிப் படிப்பை மேற்கொள்ளாத இளைஞர்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

ABOUT THE AUTHOR

...view details