இதுதொடர்பாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கூறியதாவது, "ஏற்றுமதியாளர்களிடம் மத்திய, மாநில அரசுகள் பெற்ற வாட் உள்ளிட்ட அனைத்து விதமான வரியும், அவரவர் கணக்குகளுக்குத் திருப்பிச் செலுத்தப்படும். இந்தத் திட்டத்தை இந்த ஆண்டு செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. மேலும், நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் ஏற்றுமதி மையமாக மாற்றும் வேலையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன" என்றார்.
நீங்கள் செலுத்திய வரி உங்களுக்கே திருப்பி அளிக்க அரசுத் திட்டம்! - Budget 2020 Export taxes to be reimbursed
டெல்லி: ஏற்றுமதியாளர்களிடம் மத்திய, மாநில அரசுகள் பெற்ற வரியை, அவர்களிடமே திருப்பிக் கொடுக்கப்படும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Budjet 2020 Export
நாட்டில் நிலவிவரும் பொருளாதார மந்தநிலை காரணமாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஏற்றுமதி வீதிகம் 1.8 ஆக குறைந்தது. இதனைக் கருத்தில் கொண்டு ஏற்றுமதியை அதிகரிக்கும் நோக்கிலேயே இந்தத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க :Budget2020 Live Update: மத்திய பட்ஜெட் 2020-21 நிர்மலா சீதாராமன் உரை