தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பெருநிறுவன வரி காலக்கெடு நீட்டிப்பு? நிதியமைச்சர் சூசகம்! - corporate tax rate benefit

கோவிட்-19 அவசரக் கடன் வசதி சிறு, குறு, நடுத்தரத்தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் அல்ல; அனைத்து நிறுவனங்களுக்கும்தான் என்று கூறிய மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், பெருநிறுவன வரி காலக்கெடுவை நீட்டிப்பது குறித்தும் பேசினார்.

business news  FM  பெருநிறுவன வரி  நிர்மலா சீதாராமன்  வரி நீட்டிப்பு  corporate tax rate benefit  Nirmala Sitharaman
business news FM பெருநிறுவன வரி நிர்மலா சீதாராமன் வரி நீட்டிப்பு corporate tax rate benefit Nirmala Sitharaman

By

Published : Jun 8, 2020, 10:52 PM IST

Updated : Jun 9, 2020, 1:47 PM IST

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை கூட்டமைப்பின் (FICCI) தேசிய செயற்குழு உறுப்பினர்களிடையே பேசிய நிர்மலா சீதாராமன், “இந்தியத் தொழில்களுக்கு ஊக்கமளிப்பதற்கும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கும் அரசால் முடிந்த அனைத்து ஆதரவும் வழங்கப்படும்” என உறுதியளித்தார்.

மேலும், “உங்கள் உறுப்பினர்களில் யாராவது ஒருவருக்கு பாதிப்பென்றால், ஆதரவளிக்க அரசு உறுதிப்பூண்டுள்ளது” என்றும் கூறினார்.

பணப்புழக்கத்தைப் பற்றிய கேள்விக்கு பதிலளித்த நிதி அமைச்சர், "பணப்புழக்கப் பிரச்னையை நாங்கள் நியாயமாகவும், தெளிவாகவும் கையாண்டுள்ளோம். தற்போது நிச்சயமாகப் பணப்புழக்கம் உள்ளது. ஒருவேளை இன்னும் சிக்கல்கள் இருந்தால் நாங்கள் அதைக் கவனிப்போம்" என்றார்.

இதையடுத்து, “புதிய முதலீடுகளுக்கு 15 விழுக்காடு பெருநிறுவன வரி விகிதத்தைப் பெறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்க அரசு பரிசீலிக்கும்” என்றும் கூறினார்.

மேலும் அவர்கூறுகையில், “இதில் என்ன செய்ய முடியுமென்று நாங்கள் பார்க்கிறோம். புதிய முதலீடுகளுக்கான 15 விழுக்காடு பெருநிறுவன வரி விகிதத்தின் மூலம் தொழில்கள் பயனடைய வேண்டும் என்று நாங்கள் எண்ணுகிறோம். 31 மார்ச், 2023 என்னும் காலக்கெடுவை நீட்டிப்பதை பரிசீலிப்பதற்கான தங்கள் கோரிக்கையை நான் ஏற்கிறேன்” என்று கூறினார்.

இதையடுத்து, பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சகம், இந்தியப் பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்தின் (SEBI) காலக்கெடு பற்றிய தொழில் துறையினரின் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்குமாறு அவர்களை நிர்மலா சீதாராமன் கேட்டுக்கொண்டார்.

மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள துறைகளுக்கான சரக்கு மற்றும் சேவை வரியினை (ஜிஎஸ்டி) குறைப்பதற்கான தேவை குறித்து பேசிய அவர், "சரக்கு மற்றும் சேவை வரிக் குறைப்புப் பற்றி அதற்கான குழுதான் முடிவுசெய்ய வேண்டும்.

ஆனால், அந்தக் குழு வருவாயையும் எதிர்நோக்கியுள்ளது. எந்தத் துறையின் வரி விகிதத்தைக் குறைப்பதற்கான முடிவையும் குழுதான் எடுக்க முடியும்" என்றார்.

இந்தக் கூட்டத்தில், பொருளாதார விவகாரங்கள் செயலர் தருண் பஜாஜ், பெருநிறுவன விவகாரங்கள் செயலர் ராஜேஷ் வெர்மா, நிதிச் சேவைகள் செயலர் தேபாசிஷ் பாண்டா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிங்க: ஸ்மார்ட்போனை பயன்படுத்தி ஏடிஎம் மூலம் பணம் எடுக்கும் புதிய முறை

Last Updated : Jun 9, 2020, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details