இந்தியாவின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான ரயில்வே துறையை தனியார்மயமாக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக, பயணிகள் ரயிலை இயக்க தனியார் நிறுவனங்கள் முதலீடு செய்ய அரசு அழைப்பு விடுத்துள்ளது. ரயில்வே துறையின் ஒப்பந்தத்தின் அடிப்படையில், தனியார் நிறுவனங்கள் 35 ஆண்டுகளுக்கு ரயிலை இயக்கலாம்.
109 பாதை வழியாக 151 ரயில்களை இயக்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதற்காக, தனியார் நிறுவனம் 30,000 கோடி ரூபாய் முதலீடு செய்யவுள்ளதாக ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில், ரயில்வே துறையை தனியார்மயமாக்குவதன் மூலம் ஏழை மக்களின் வாழ்வாதாரத்தில் அரசு பாதிப்பை ஏற்படுத்துகிறது என ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.