தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'நோயைக் கட்டுப்படுத்துவதற்காக அரசு எடுக்கும் முயற்சிகள் திருப்தியளிக்கிறது' - உச்ச நீதிமன்றம்

டெல்லி: கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு எடுக்கும் முயற்சிகள் திருப்தியளிக்கிறது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

sc
sc

By

Published : Mar 23, 2020, 11:56 PM IST

கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்துவதற்காக மத்திய, மாநில அரசுகள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனக் கோரி பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். கரோனா வைரஸ் நோய் கண்டறிதல் மையங்களை அதிகரிக்கவும், கோயில்களை மூடவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த மனுக்களை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், "வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்த அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இது எங்களுக்கு திருப்தியளிக்கிறது. எதிர்க்கட்சியினர் கூட அரசின் நடவடிக்கைகளைப் பாராட்டிவருகின்றனர். இது அரசியல் அல்ல; தரவுகளைக் கொண்டது" என்றனர். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் ஒன்றான கோயில்களை மூடுவது குறித்து மாநில அரசுகள் முடிவெடுக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா அச்சுறுத்தல்: உயிரிழப்பு 9ஆக உயர்வு

ABOUT THE AUTHOR

...view details