தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெட்டுக்கிளிகள் தாக்குதல்: அரசு தடுப்பு நடவடிக்கை - tamil latest news

வெட்டுக்கிளிகள் தாக்கத்தால் வருகின்ற மழைக்காலப் பயிர் விதைப்பை எண்ணி விவசாயிகள் அச்சப்படுகிறார்கள். இந்தச் சூழலில் இந்தப் பிரச்னைக்கு அரசு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

அரசாங்கம் தடுப்பு நடவடிக்கை
அரசாங்கம் தடுப்பு நடவடிக்கை

By

Published : May 29, 2020, 3:09 PM IST

வெட்டுக்கிளிகள் கூட்டத்தின் அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. மேலும் மழைக்காலப் பயிர்களை விதைப்பதற்கு முன்னர் விவசாயிகளுக்கு இதுபெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திவருகிறது.

இதன் காரணமாக மத்திய வேளாண்மை, உழவர் நல அமைச்சகம் நேற்று முன்தினம் (மே 27) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேற்கு, வடமேற்கு இந்தியா முழுவதும் வெட்டுக்கிளிகள் கூட்டம் தாக்கிவரும் நிலையில் பாதிக்கப்பட்ட ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், குஜராத், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் வெட்டுக்கிளிகளைத் தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

பாதிக்கப்பட்ட மாநிலத்தின் மாவட்டங்களில் வெட்டுக்கிளிகள் கட்டுப்பாட்டு வட்டார அலுவலகம் (LCO) அமைக்கப்பட்டுள்ளது. இது மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்படும். மேலும் வேளாண்மை கள இயந்திரங்களுடன் எப்போதும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு தயாராக இருக்கும்.

ராஜஸ்தானில் 21 மாவட்டங்கள், மத்தியப் பிரதேசத்தில் 18 மாவட்டங்கள், பஞ்சாபில் ஒரு மாவட்டம், குஜராத்தில் இரண்டு மாவட்டங்கள் என இந்த மாவட்டங்களில் வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்தும் வேலைகள் தற்போதுவரை மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மேலும் இதனை விரட்ட ராஜஸ்தானில் அஜ்மீர், சித்தோர்கர், மத்தியப் பிரதேசத்தில் மாண்ட்சார், உஜ்ஜைன், சிவபுரி, உத்தரப் பிரதேசத்தில் ஜான்சி போன்ற இடங்களின் எல்லைப்பகுதிகளில் சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிப்பதற்காக 89 தீயணைப்பு படையினர், 120 கண்காணிப்பு வாகனங்கள், தெளிப்பு உபகரணங்களுடன், 47 கட்டுப்பாட்டு வாகனங்கள், 810 டிராக்டர்களில் பொருத்தப்பட்ட தெளிப்பான்கள் என வெட்டுக்கிளிகள் கட்டுப்பாட்டுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

தற்போதுவரை ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் இளம் வெட்டுக்கிளிகள் கூட்டம் அதிகம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வெட்டுக்கிளிகளின் திரள்: பிகார், ஒடிஷா விவசாயிகளுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details