புதுச்சேரி அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனம் சார்பில் மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வேண்டிய கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று ஒரு நாள் விடுப்பு எடுத்து மறியல் போராட்டம் நடத்தபோவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இன்று புதுச்சேரி அண்ணா சிலை முன்பு அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத்தினர் அங்கு திரண்டனர்.
சங்கத்தலைவர் பிரேமதாசன் தலைமையில் பேரணியாக புறப்பட்டு அண்ணா சிலை, நேரு வீதி வழியாக மிஷின் வீதி வந்தடைந்தனர். அங்கு அவர்களை பெரியகடை ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.