கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும்விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அனைத்துவிதமான போக்குவரத்துச் சேவைகளும் முடக்கப்பட்டுள்ளன. புலம்பெயர் தொழிலாளர்கள், தினக்கூலிகள், மாற்றுத்திறனாளிகள் என பல்வேறு தரப்பினர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கால் வேலைவாய்ப்பின்மை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவித்த காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, அனைத்து குடும்பத்தினருக்கும் ரூபாய் 7,500 நிதியுதவியாக வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்தார்.
இந்தாண்டு, உணவின்றி தவிக்கும் மக்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு உயர்ந்து 265 மில்லியனாக இருக்கும் என ஐநாவின் உலக உணவுத் திட்டம் அறிக்கை வெளியிட்டுள்ளது.