வெளிநாடுகளுடன் மேற்கொள்ளும் நிதிப் பரிவர்த்தனைக்காக உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளுக்கு பதிலாக பிரத்யேக ஒழுங்குமுறை ஆணையம் ஒன்றை மத்திய அரசு அமைத்துள்ளது.
இதுவரை சர்வதேச நிதி பரிவர்த்தனைகளில் உள்ள வங்கி, முதலீட்டுச் சந்தை, காப்பீடு ஆகிய துறைகளுக்கு ஒழுங்குமுறை அமைப்புகளாக ரிசர்வ் வங்கி, செபி, காப்பீடு ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவை செயல்பட்டு வந்தன.
தற்போது அனைத்து நிதிபரிவர்த்தனைக்கும் பிரத்யேகமாக சர்வதேச நிதி சேவை மையம்(IFSC) என்ற அமைப்பு உருவாக்கப்படுவதாகவும், ஒழுங்குமுறை பணிகளை இவை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைப்பு குஜாரத் தலைநகர் காந்திநகரில் உள்ள கிஃப்ட் சிட்டியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:'வீழ்ச்சியில் பொருளாதாரம்; முக்கிய நடவடிக்கைகள் தேவை' - சஜ்ஜன் ஜின்டால்