ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த தேசிய மக்கள்தொகை பதிவெடு (என்.பி.ஆர்.), மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகள் மறு உத்தரவு வரும் வரை ஒத்திவைக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கோவிட்-19 அச்சுறுத்தல்: என்.பி.ஆர். பணிகள் ஒத்திவைப்பு! - என்.பி.ஆர், என்.ஆர்.சி பணிகள் ஒத்திவைப்பு
16:53 March 25
டெல்லி: கோவிட்-19 தொற்றுநோய் அச்சுறுத்தல் காரணமாக என்.பி.ஆர். புதுப்பிப்பது, மக்கள் கணக்கெடுப்பின் முதல் கட்டப் பணிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இப்பணிகள் ஒத்திவைக்கப்படலாம் என தகவல் வெளியாகி இருந்த நிலையில், இது குறித்து உள்துறை அமைச்சகத்தை சேர்ந்த உயர்மட்ட அரசு அலுவலர்கள் இன்று ஆலோசித்து வந்தனர். இதனையடுத்து, இன்று ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி. போன்றவற்றை அமல்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்த கேரளா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், பஞ்சாப், சத்தீஸ்கர், பிகார் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க :சமூக இடைவெளி: சீனாவை பின்பற்றும் மகாராஷ்டிரா!