கரோனா நோய் தொற்றை தடுக்க முக்கியமான அறிவுரையாக கிருமி நாசினி கொண்டு கைகளை தூய்மை செய்ய வேண்டும் என்பது அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால், பொதுமக்களின் பயன்பாட்டில் முக்கியமான ஒன்றாக சானிடைசர், மாஸ்க் போன்றவை உள்ளன. மேலும், கரோனா பரவல் அதிகரித்துள்ளதால் சானிடைசர், மாஸ்க் ஆகியவை அத்தியாவசிய தேவையாக மாறிவிட்டன.
இந்நிலையில், மருத்துவ சம்பந்தப்பட்ட பொருள்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவித்திருந்தது. பொருளாதார நெருக்கடி காரணமாகவும், உற்பத்தி அதிகரித்துள்ளதாலும் மருத்துவ பொருள்களை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.