நாட்டை சூறையாடி வரும் கரோனா பெருந்தொற்றை முன்னின்று போராடி வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட கரோனா வாரியர்ஸ்களின் மீது நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று கூடிய அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில், தொற்றுநோய் சட்டம் 1897-இன் அடிப்படையில் கரோனா அவசரச் சட்டம் முன்மொழியப்பட்டு உடனடியாக நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், "நோய் தொற்றை எதிர்த்துப் போராடி வரும் நம் சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்ட கரோனா வாரியர்ஸ்கள், அவர்களின் சொத்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதனை இந்திய அரசாங்கம் பொறுத்துக்கொள்ளாது. அதுவும் நாகரிகமான சமூகத்தில் இது தொடர அரசு அனுமதிக்காது.
இந்த அவசரச் சட்டப்படி, மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்களை தாக்கும் நபர்களுக்கு ஆறு மாதங்கள் முதல் ஏழு வருடங்கள் சிறைத் தண்டனையும், ஐந்து லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் " மம்தாவுக்கு மருத்துவர்கள் வலியுறுத்தல்