சீனாவில் ஆரம்பித்த கரோனா வைரஸ் தொற்று தற்போது உலகத்தை ஆட்டிப்படைத்துவருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இந்தத் தொற்று இந்தியாவில் 415 பேருக்கு இருக்கிறது, ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து இந்தியா முழுவதும் 75 மாவட்டங்களைத் தனிமைப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
உத்தரவைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் - மத்திய அரசு
டெல்லி: மாவட்டங்களுக்கான தனிமைப்படுத்தும் உத்தரவை மாநில அரசுகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டுமென மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு
இந்நிலையில், மாவட்டங்களுக்கான தனிமைப்படுத்தும் உத்தரவை மாநில அரசுகள் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் எனவும் அதை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் ஒன்பது பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.