மாற்றுத்திறனாளி உரிமைகள் சட்டம், 2016இன் கீழ், 40 சதவீதம் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு 3,566 காலி பணியிடங்களை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதில், ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர், ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம் கோளாறு, அறிவுசார் இயலாமை, குறிப்பிட்ட கற்றல் குறைபாடு, மன நோய் உள்ளிட்ட அரசின் விதிமுறைகளுக்கு உட்ப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.