உலகளவில் கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத அளவு சரிந்துவரும் சூழலிலும் மத்திய அரசு பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்டவைகளின் கலால் வரிகளை தொடர்ந்து அதிகரித்துவருகிறது.
முன்னதாக, கரோனா வைரஸ் பாதிப்பினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் மக்கள் அத்தியாவசிய தேவைகளான பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையில் அதிகளவு வரிகளை திணிப்பதால் மேலும் பாதிப்படைந்துவருகின்றனர்.
மக்கள் மீது சுமத்தப்படும் இந்த வரிகளை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயுக்களின் விலை நிர்ணயம் ஜிஎஸ்டி வரம்பிற்குள் கொண்டுவரவேண்டும். 2014ஆம் ஆண்டிற்கு முன் விதிக்கப்பட்டிருந்த பெட்ரோல், டீசல் விலைகளைப்போல மீண்டும் குறைக்கப்படவேண்டும் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா தெரிவித்துள்ளார்.