கரோனா அச்சுறுத்தலைத் தொடர்ந்து, நாடு முழுவதும் 21 நாள்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துவிதமான போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்ட நிலையில், வர்த்தகம் பெரிய அளவில் முடங்கியது. பொருளாதார மந்த நிலையில் சிக்கி தவித்து வந்த இந்தியாவிற்கு இது மேலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
பொருளாதார வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய நிறுவனங்களின் பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்கள் வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலையால் இந்திய நிறுவனங்கள் பலவீனமாகியுள்ளன.
எனவே, வெளிநாட்டு நிறுவனங்கள் கையகப்படுத்தும் வகையில் கவர்ச்சிகரமான இலக்காக அது மாறியுள்ளது. இம்மாதிரியான இக்கட்டான சூழ்நிலையில் இந்திய நிறுவனங்களின் கட்டுப்பாட்டை வெளிநாட்டு நிறுவனங்கள் எடுக்க மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது" என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: 'கோவிட்-19க்கு எதிராக போர்க்கால அடிப்படையில் தீர்வை உருவாக்குங்கள்'- ஹர்ஷவர்தன்