முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, அமேசான் தலைமை நிர்வாக அலுவலர் ஜெஃப் பெசோஸ், மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாக அலுவலர் எலோன் உள்ளிட்ட பல உயர்நிலைப் பயனர்களின் ட்விட்டர் கணக்குகளை சைபர் தாக்குதல் நடத்தி, ஹேக் செய்துள்ளனர்.
பல உலகளாவிய கார்ப்பரேட் தலைவர்கள், அரசியல்வாதிகள், பிரபலங்கள் மற்றும் வணிகர்களின் கணக்குகளை ஹேக் செய்ய ட்விட்டரின் அமைப்புகளுக்கு, ஹேக்கர்கள் அணுகலைப் பெற்றதாக வெளியான தகவல்களுக்குப் பிறகு, இந்திய கணினி அவசரநிலை பதிலளிப்பு குழு (சிஇஆர்டி-இன்) ஆராய்ந்து செயல்பட்டது.