கரோனா வைரஸ் காரணமாக ஆகஸ்ட் 20ஆம் தேதி டெல்லியில் 22 பேர் உயிரிழந்தனர். கடந்த 10 நாட்களின் தரவுகளைப் பார்த்தால், கரோனா வைரஸ் காரணமாக டெல்லியில் 131 பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில் 70 இறப்புகள் கடந்த ஐந்து நாட்களில் நிகழ்ந்தன.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயின், "ஜூன் மாதத்தில் 35 விழுக்காடாக இருந்த தொற்று விகிதம் தற்போது ஏழு விழுக்காடாக குறைந்துள்ளது. ஆனால், கரோனா வைரஸ் காரணமாக உயிரிழப்புகள் இன்னும் கவலையளிக்கும் படியாக உள்ளது. இந்த புள்ளி விவரங்கள் குறைவாக இருந்தாலும் ஜூன் மாதத்தை விட, தற்போது ஒவ்வொரு நாளும் 10-20 பேர் இறக்கின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் 1,250 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் 1,082 குணமடைந்துள்ளனர். 13 பேர் உயிரிழந்தனர். தற்போது தேசிய தலைநகரில் 11 ஆயிரத்து 426 பேர் கரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு விகிதத்தை குறைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது" என்று கூறினார்.
மேலும், கரோனா காரணமாக இறப்புகள் எதுவும் இல்லை என்பதை உறுதி செய்வதே இதன் நோக்கம். ஆனால் இப்போது நாங்கள் இறப்பு விகிதத்தைக் குறைக்க முயற்சிக்கிறோம். சராசரி ஆம்புலன்ஸ் வருகை நேரமும் 18 விழுக்காடாக குறைந்துள்ளது. சமீபத்தில், டெல்லியின் நான்கு பெரிய மருத்துவமனைகளில் கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க பரிந்துரைகளை வழங்க டெல்லி அரசு நான்கு குழுக்களை அமைத்துள்ளது எனக் கூறினார்.