தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போர் நிறுத்த விதிகளை மீறி ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் தாக்குதல் - pakistan shells in poonch district near LOC

ஸ்ரீநகர் : போர் நிறுத்த விதிகளை மீறி ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லை கட்டுப்பாடுக் கோடு அருகே பாகிஸ்தான் ராணுவம், சிறிய ரக பீரங்கிகள் கொண்டு இன்று அதிகாலை தாக்குதல் நடத்தியுள்ளது.

Breaking News

By

Published : Jun 9, 2020, 1:04 PM IST

இதுகுறித்து கர்னல் தேவேந்தர் ஆனந்த் கூறுகையில், "ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள மன்கோட் என்ற எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை 6.30 மணியளவில், போர்நிறுத்த விதிகளை மீறி பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக பீரங்கிகள் கொண்டு தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது" என்றார்.

மான்கோட் பகுதியில் தொடர்ந்து இருதரப்பு ராணுவத்திற்கும் இடையே மோதல் நிலவிவருவதால், அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

முன்னதாக நேற்று இரவு 7.45 மணியளவில் பூஞ்ச் மாவட்டத்தின் காரி கர்மாரா பகுதியில் பாகிஸ்தான் இதேபோன்று போர் நிறுத்த விதிகளை மீறி தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்தியத் தரப்பின் துரித நடவடிக்கையால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டன.

இதையும் படிங்க : தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்ட அஜித் பண்டிட் - தலைவர்கள் இரங்கல்

ABOUT THE AUTHOR

...view details