இந்திய எண்ணெய் இறக்குமதியாளர் சங்கத்தில் 85 உறுப்பினர்கள் உள்ளனர். அவர்கள் சுமார் 3 கோடி டன் அளவுக்கு எண்ணெய், எண்ணெய் வித்துக்களை ஆகியவற்றை இறக்குமதி செய்கின்றனர். இதில் மலேசியாவிலிருந்து அதிக அளவில் அதாவது 30 லட்சம் டன் அளவுக்கு பாமாயில் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது.
சமீபத்தில் நடந்த ஐநா பொதுக் குழுக் கூட்டத்தில் மலேசிய பிரதமர் மகாதீர் பின் முகமது, பாகிஸ்தானை ஆதரித்து பேசினார். அத்துடன் இந்தியா ராணுவத்தின் மூலம் காஷ்மீரை ஆக்கிரமித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து, இந்திய எண்ணெய் இறக்குமதியாளர் சங்கம் மலேசிய பாமாயில் இறக்குமதியை தடை செய்தது. மலேசியாவில் அதிக அளவில் இந்தியர்கள் குறிப்பாக தமிழ்நாட்டு மக்கள் பணி செய்து வருவதால், அவர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டினர்.
'சேமிப்பதில் பெண்கள் ஆர்வம் காட்டினாலும் அதில் எந்தவொரு திட்டமிடலும் இல்லை'
இத்தருணத்தில் மத்திய வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சர் பியுஷ் கோயல், “மலேசிய பாமாயில் இறக்குமதி தடை குறித்து எனக்கு எதுவும் தெரியாது என்றும், காஷ்மீர் விவகாரம் இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்பதால் அதில் மலேசியா தலையிடுவதைச் சங்கத்தினர் விரும்பாமல் இருந்திருக்கலாம். ஆனால் அரசு மலேசிய பாமாயில் இறக்குமதிக்கு தடை விதிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்