கரோனா வைரஸ் நோயால் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து முடக்கப்பட்டிருப்பதால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்கு செல்ல முடியாமலும் உணவின்றியும் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "வெளிமாநில தொழிலாளர்களுக்கு அனைத்து விதமான உதவிகளை செய்ய மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்காக, நிவாரண முகாம்களை உடனடியாக அமைக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது" என்றார்.