மத்திய உள்துறை செயலராக தற்போது இருந்து வரும் அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் வரும் நவம்பர் 30ஆம் தேதியுடன் நிறைவடையவுள்ளது. இதையடுத்து அவர் ஓய்வு பெற இருந்த நிலையில், பல்லாவின் பதவிக்காலத்தை 2021 ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி வரை நீட்டித்து பணியாளர் அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக மத்திய அமைச்சரவை நியமனக் குழு ஏற்கனவே ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், இந்த உத்தரவு பிறபிக்கப்பட்டுள்ளது. 1984ஆம் ஆண்டு அஸ்ஸாம்-மேகாலயா பிரிவிலிருந்து ஐஏஎஸ் அலுவலராக தேர்ச்சி பெற்ற அஜய் குமார் பல்லா, 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய உள்துறை செயலராக நியமிக்கப்பட்டார்.