ஜோசப் மார் தோமாவின் 90ஆவது பிறந்தநாள் விழா கேரளாவிலுள்ள தோமா தேவாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்துகொண்டார். நிகழ்வில் பேசிய அவர், மத்திய அரசு சாதி, மதம், இனம், மொழி, பாலினம் ஆகியவற்றின் பெயரில் பாகுபாடு காட்டவில்லை. மத்திய அரசுக்கு வழிகாட்டும் ஒளியாக அரசியலமைப்புச் சட்டம் இருக்கிறது.
மார் தோமா தேவாலயம் இந்தியச் சுதந்திரப் போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்துள்ளது. தேசிய ஒருமைப்பாட்டின் முன்னணி களச் செயல்பாடுகளுக்காக இந்தத் தேவாலயம் பங்காற்றியது. அவசர நிலையைக் கூட தோமா தேவாலயம் எதிர்த்தது. இந்தத் தேவாலயம் இந்தியக் கலாசாரத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது.