கரோனா வைரஸ் தொற்று நாட்டின் பொருளாதாரம் மற்றும் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களில் ஏற்படுத்தி உள்ள தாக்கம் குறித்து, காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.
அதில், தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையிலிருந்து மீண்டுவர ஏழைகளின் வங்கி கணக்கில் உடனடியாக ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) பொருளாதார ஊக்குவிப்புத் தொகை வழங்க வேண்டும். மக்கள் மற்றும் எம்எஸ்எம்இக்களுக்கு பண உதவி வழங்க மறுப்பதன் மூலம் மத்திய அரசு பொருளாதாரத்தை தீவிரமாக அழித்து வருகிறது. இது மோடி அரசின் அரக்கன் 2.0" செயல்.
எம்எஸ்எம்இ துறைக்கு பொருளாதார ஊக்குவிப்பு சலுகை வழங்கவேண்டும் என்று முன்னதாகவே காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன்மூலம் ஏராளமான மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்க முடியும். அதுமட்டுமின்றி சந்தையில் பணப்புழக்கத்தை ஏற்படுத்தவும் இந்த நடவடிக்கை உதவியாக இருந்திருக்கும்.
இந்த நெருக்கடியிலிருந்து மக்களும், தொழில்துறையினரும் மீண்டு வருவதற்கு ஏதுவாக பணத்தை வழங்காதது மத்திய அரசின் குற்றம் என்றும்,கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மத்திய அரசால் அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய ஊரடங்கு "தோல்வியுற்றது" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: மேக் இன் இந்தியா முதல் சுயசார்பு இந்தியா வரை - இணையற்ற வளர்ச்சி திட்டங்கள்