புதுச்சேரி சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் போக்குவரத்து கழக தலைமை அலுவலகம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்கத்தின் தலைவர் பத்மநாபன் தலைமை வகித்தார்.
புதுச்சேரி அரசு போக்குவரத்து ஊழியர்கள் ஆர்பாட்டம் - போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம்
புதுச்சேரி: சாலை போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கத்தினர் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பணிமனை முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்

இதில்,ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி, எல்ஐசி கூட்டுறவு கடன் சங்க தொகைகளை சாலைப் போக்குவரத்து கழகத் தொழிலாளர்களிடம் தரவேண்டும். ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் 12 ஆண்டுகளாக பணிபுரியும் பெண் நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்பாட்டம் நடைபெற்றது.
இதில் அரசு ஊழியர்கள் சம்மேளம் தலைவர்கள் பாலமுருகன், ராதாகிருஷ்ணன் மற்றும் புதுச்சேரி சாலை போக்குவரத்து ஓட்டுநர்கள்,நடத்துனர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்