மத்திய சுகாதார அமைச்சகம், சுகாதாரப் பணியாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீட்டுடன், ரூ. 22.12 லட்சம் மதிப்பிலான சுகாதாரப் பாதுகாப்பு திட்டங்களை அறிவித்துள்ளது.
இந்தக் காப்பீட்டு திட்டத்தில் தனியார் மருத்துவமனை ஊழியர்கள், ஓய்வுப் பெற்ற மருத்துவ ஊழியர்கள், தன்னார்வலர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனையிலுள்ள தினக்கூலிகள் உள்ளிட்டோரும் அடங்குவார்கள்.
இதன் காலம் மார்ச் 30ஆம் தேதியிலிருந்து தொடங்கி 90 நாள்கள் வழங்கப்படும். இந்தக் காப்பீட்டின் முழு தொகையையும் சுகாதார அமைச்சகமே செலுத்தும். ஒருவேளை கோவிட்-19 வைரஸ் தாக்கியோ அல்லது கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் உயிரிழக்க நேரிட்டாலோ காப்பீட்டு தொகையை பெற்றுக் கொள்ளலாம்.
இந்தியாவில் கோவிட்-19 வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது ஆறாயிரத்தை தாண்டிவிட்டது. இதில் சில மருத்துவர்களும் அடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.