ராணுத்தில் இந்நாள்வரை, 10 ஆண்டுகளுக்கும் மேல் சேவையில் உள்ள வீரர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் வழங்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் இந்த வரம்பை தற்போது பாதுகாப்பு அமைச்சகம் மாற்றியுள்ளது.
இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ”பத்து ஆண்டுகளுக்கும் குறைவாக ராணுவ சேவையில் உள்ள வீரர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் வழங்க அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது. இந்த பரிந்துரைக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார்.