டெல்லி: மத்திய அரசு ஒரு பலவீனமான போக்கை பின்பற்றி சீன நிறுவனத்திற்கு ரயில் ஒப்பந்தத்தை கொடுத்து, அவர்கள் முன் மத்திய அரசு கைக்கட்டி நிற்கிறது என கடுமையாக விமர்சித்தார்.
சீனாவுக்கு ரயில்வே ஒப்பந்தங்கள்; - பிரியங்கா காந்தி காட்டம் - பிரியங்கா காந்தி
காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, சீனாவைப் புறக்கணிக்க பலவீனமான அணுகல்களை மேற்கொண்டதற்காக மத்திய அரசை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். ஒரு ஊடக செய்தி மேற்கோள்காட்டி இந்தச் சூழலிலும் சீனாவிடம் ரயில்வே ஒப்பந்தத்தை இந்திய அரசு கொடுத்துள்ளதாக தெரிவித்தார்.

இந்தச் சூழலில் இந்திய அரசு சீனாவிற்கு தக்க பதிலை அளித்திருக்க வேண்டும். நாம் இருபது ராணுவ வீரர்களை இழந்திருக்கிறோம். ஆனால் அதற்கேற்ற அணுகுமுறையை மேற்கொள்ளாமல், டெல்லி - மீரட் இடையே அமையவிருக்கும் அதிவேக ரயில் பாதையின் ஒப்பந்தத்தை சீனாவிடம் கொடுத்து மத்திய அரசு கைக்கட்டி நிற்கிறது என அவர் ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
இந்திய சீன ராணுவத்தினர் இடையே மோதல் போக்கு தொடரும் நிலையில், டெல்லி - மீரட் விரைவு ரயிலுக்கான ஒப்பந்தத்தை ஒரு சீன நிறுவனம் ரூ. 1126 கோடிக்கு பெற்றுள்ளது என்ற ஊடக அறிக்கையை மேற்கோள் காட்டி இந்த ட்வீட் பதிவை பிரியங்கா காந்தி பதிவிட்டுள்ளார். லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் திங்கள்கிழமை இரவு இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே ஏற்பட்ட எல்லைச் சண்டையில், இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர்.