மகாராஷ்டிரா மாநிலத்தில் கோவிட்-19 பரவல் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் மூடியுள்ள நிலையில், அங்குள்ள வழிபாட்டுத் தலங்களைத் திறக்க வலியுறுத்தி அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு ஆளுநர் பகத் சிங் கோஷியாரி எழுதிய கடிதம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
முதலமைச்சர் மதச்சார்பற்றவராக எப்போது மாறினார் என்று ஆளுநர் கடிதத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். ஆளுநர் பொறுப்பிலிருக்கும் ஒருவர் இதுபோன்ற பொறுப்பற்ற முறையில் கருத்தை வெளியிட்டதைக் கண்டித்து பல்வேறு எதிர்ப்பு குரல்கள் எழத் தொடங்கின.
குறிப்பாக, மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா, ஆளுநர் இதுபோன்ற முறையற்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது எனக் கூறியிருந்தார்.