உலகை அச்சுறுத்தும் கரோனாவிலிருந்து தற்காத்துக்கொள்ள ஒரு பகுதியாக, இன்று (மார்ச் 22) மக்கள் தாங்களாக முன்வந்து ஊரடங்கைப் பின்பற்ற வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.
கரோனாவை தடுக்கும் சூப்பர் ஹீரோக்களை உற்சாகப்படுத்திய கிரண்பேடி - கரோனா சுய ஊரடங்கு
புதுவை: கரோனா தொற்று நோய் பரவாமல் பாதுகாக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் அனைவருக்கும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி கைதட்டி மணி அடித்து உற்சாகப்படுத்தினர்.
மேலும் கரோனா தொற்றை தடுக்கும் வகையில் அர்ப்பணிப்போடு பணியாற்றும் மருத்துவர்கள், துப்புரவு பணியாளர்கள் உள்ளிட்டோர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கரவொலி எழுப்புங்கள் எனவும் கூறியிருந்தார்
இதனையடுத்து இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. மாலை 5 மணி அளவில் கரோனா தொற்றை தடுக்கும் பணியில் ஈடுபட்டவர்களுக்கு புதுச்சேரி துனணநிலை ஆளுநர் கிரண்பேடி, அலுவலக ஊழியர்கள் ஆளுநர் மாளிகையின் வாயிற் பகுதியில் நின்றுக் கொண்டு மணி அடித்தும் கைதட்டியும் ஓசை எழுப்பி பாராட்டினார்கள்.