புதுச்சேரியில் கரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் வருவதால் மருத்துவமனைகளில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. இருப்பினும் தனியார் மருத்துவக் கல்லூரிகளிடம் படுக்கைகளை அரசு பெறவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், புதுச்சேரியில் போதிய மருத்துவ வசதி இருந்தும் மக்கள் சிரமப்படுகிறார்கள் என்றும் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இதில் தலையிட வேண்டும் என்று ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.
இது குறித்து துணைநிலை ஆளுநர் கிரண்பேடி விடுத்துள்ள வாட்ஸ்அப் அறிக்கையில், "புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 7இல் 2 தவிர மீதமுள்ளவை. நோயாளிகளுக்கு தற்போது படுக்கை வசதி தேவைப்படுகிறது. மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகிறார்கள்.