தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'கோவிட் பரவலைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்' - ஆளுநர் கிரண்பேடி! - Prduchery governor press release

புதுச்சேரி : உறுதிப்படுத்தப்படாத செய்தியைப் பரப்புவதில் கவனம் செலுத்துவதைத் தவிர்த்து கோவிட் பரவலைத் தடுக்க அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும் என, ஆளுநர் கிரண்பேடி வலியுறுத்தியுள்ளார்.

Prduchery governor press release
Prduchery governor press release

By

Published : Jul 27, 2020, 7:42 AM IST

இதுதொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி வெளியிட்ட செய்திக்குறிப்பில்," புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக புதுச்சேரியில் இல.கணேசன் எம்பி புதிய ஆளுநராக தேர்வு செய்யப்படுவார் என, பத்திரிகைகளில் செய்தி பரவி வருகிறது. இதுபோன்று நிறைய செய்திகள் தனக்கு வருகிறது.

இதுகுறித்து எனக்கு எதுவும் தெரியாது. உறுதிப்படுத்தப்படாத செய்திகளைப் பதிவிடுவதையும், அனுப்புவதும் தவிர்க்கப்பட வேண்டும். கோவிட்-19 பரவலைத் தடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து கவனத்தை அதில் செலுத்துவோம்" என, அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details