தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பாடல் பாடி கிறிஸ்துமஸ் கொண்டாடிய கிரண்பேடி! - ஆளுநர் கிரண்பேடி

புதுச்சேரி: கிறிஸ்துமஸ் பெருவிழாவை முன்னிட்டு ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் கிரண்பேடி பாடல்கள் பாடி கொண்டாடினார்.

bedi
bedi

By

Published : Dec 25, 2020, 9:58 AM IST

குழந்தை இயேசு பிறந்த தினம் இன்று உலகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல், புதுச்சேரியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் நள்ளிரவு கிறிஸ்து பிறப்பு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.

புதுச்சேரி ஆளுநர் மாளிகையிலும் கிறிஸ்துமஸ் மரம் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. அங்கு கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்டு பாடல்களுடன் விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் கிரண்பேடி கலந்து கொண்டு பாடல்கள் பாடி பங்கேற்றார். அலுவலக ஊழியர்களுடன் கிறிஸ்துமஸ் விழாவை அவர் கொண்டாடினார்.

பாடல் பாடி கிறிஸ்துமஸ் கொண்டாடிய கிரண்பேடி!

இதையும் படிங்க: கிறிஸ்துமஸ் பண்டிகை: திருப்பலியில் பங்கேற்ற முதலமைச்சர்!

ABOUT THE AUTHOR

...view details