தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

செழிப்பான புதுச்சேரியை உருவாக்குவோம்! - ஆளுநர் கிரண் பேடி

புதுச்சேரி: உள்ளாட்சி தேர்தலில் சரியான வேட்பாளர்களை தேர்ந்தெடுக்க மக்கள் தயாராக இருக்க ஆளுநர் கிரண் பேடி வலியுறுத்தியுள்ளார்.

bedi
bedi

By

Published : Oct 24, 2020, 9:12 AM IST

இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ புதுச்சேரி மக்கள் அரசுக்கு தகவல் அளித்து பொறுப்புகளை புரிந்துகொண்டால் உள்ளாட்சித் தேர்தலுக்கு பின் உள்ளூர் பிரச்னைகளைத் தீர்க்க போதிய நிதி ஆதாரம் கிடைக்கும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்பு இல்லாததால் போதிய நிதியை பெற முடியவில்லை. உள்ளாட்சி அமைப்புகள் மூன்றில் ஒரு பகுதி பெண்களால் உருவாக்கப்படும். இது புதுச்சேரியில் வியத்தகு மாற்றத்தை உருவாக்கும்.

தற்போது அமைச்சரவையில் இங்கு பெண்களுக்கு இடமில்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு பெண்கள் தலைமை ஏற்கும் சுயராஜ்யம் அமைந்தால், புதுச்சேரிக்கு இந்திய அளவில் தனித்துவ இடம் கிடைக்கும். எந்த தாமதமும் இன்றி தேர்தலை செயல்படுத்த சட்ட வழிகாட்டுதல் உள்ளது. தலைமைச் செயலர் தலைமையிலான குழு மற்றும் மத்திய அரசின் குழு மூலம் தேர்தல்களை நடத்துவதற்கு மிக அனுபவம் வாய்ந்த மூத்த அலுவலர்களை பெற்றுள்ளோம்.

வரும் மாதங்களில் சரியான வேட்பாளர்களை அடையாளம் கண்டு தேர்ந்தெடுப்பதற்கு மக்கள் தயாராக வேண்டும். எனவே ஒரு செழிப்பான புதுச்சேரியை உருவாக்க உறுதி எடுப்போம் “ என்று குறிப்பிட்டுள்ளார்.

புதுச்சேரியில் கடந்த பத்து ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தல் நடக்காத நிலையில், இரு நாட்களுக்கு முன் மாநில தேர்தல் அலுவலர் நியமிக்கப்பட்டார். முதலமைச்சர் நாராயணசாமி, ஆளுநர் கிரண் பேடி இருவருக்குமிடையேயான அதிகார பகிர்வு பிரச்னையால் தள்ளிப்போயிருந்த உள்ளாட்சி தேர்தல் இனியாவது நடக்க வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாக இருக்கிறது.

இதையும் படிங்க: புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் : நாராயணசாமி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details