தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல்

புதுச்சேரி: இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.

By

Published : Jan 14, 2021, 8:34 PM IST

புதுச்சேரியில் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்
புதுச்சேரியில் இலவச மருத்துவ காப்பீட்டு திட்டத்திற்கு ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல்

இது தொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் அலுவலகம் இன்று (ஜனவரி 14) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா என்ற திட்டத்தின் கீழ் ஏழை, எளியோருக்கு மருத்துவ உதவி வழங்கும் திட்டத்தை பாரத பிரதமரின் முதன்மை திட்டமான யூனியன் பிரதேசத்தை ஒருங்கிணைக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த ஒருங்கிணைப்பு திட்டம் ஜனவரி 13ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இத்திட்டத்தின் நன்மை கருதி மத்திய உள்துறை அமைச்சர் நிர்வாகத்திற்கு மேற்கூறிய ஒருமுகப்பட்ட ஒருங்கிணைப்புக்கு ஆலோசனை கூறினார். புதியதாக ஒன்று சேர்க்கப்பட்ட இத்திட்டத்தின் படி, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் வறுமைகோட்டுக்கு கீழுள்ளவர்கள் இப்போது ரொக்கமில்லா சிறந்த சிகிச்சை பெற முடியும்.

வருடத்திற்கு சுமார் 5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் குடும்ப அட்டை, ஆதார் அட்டை போன்ற அடையாள அட்டையை சமர்ப்பித்தால் அரசு நேரடியாக மருத்துவமனை செலவை செலுத்த முடியும். தற்போது உள்ள யூனியன் பிரதேச திட்டத்தின் கீழ் நோயாளிகள் 3.25 லட்சம் ரூபாய் வரை மட்டுமே பெற முடியும். அதுவும் திருப்பி செலுத்துதல் அடிப்படையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதாவது நோயாளிகள் மருத்துவமனை கட்டணங்களைச் செலுத்தி அதன் பின்னர் பணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்க வேண்டும். பயனாளிகளின் ஆண்டு வருமானம் 1.5 லட்சத்துக்கு மேல் இருக்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதம மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டத்தின் கீழ் 1.75 குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் பயன்பெறுவர். இவ்வாறு ஆளுநர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

இதையும் படிங்க: புதுச்சேரி முதலமைச்சர் வழங்கும் ஆரோக்கியமான பொங்கல் பரிசு

ABOUT THE AUTHOR

...view details