தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

'பெரும்பான்மை இருந்தால் எதை வேண்டுமானாலும் செய்யலாமா?' - கோபப்பட்ட பிரணாப் முகர்ஜி

டெல்லி: அறுதிப் பெரும்பான்மை இருப்பதால் எதை வேண்டுமானாலும் அமல்படுத்தலாம் என்ற சிந்தனை இருக்கக் கூடாது என மத்திய அரசுக்கு, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி எச்சரித்துள்ளார்.

pranab mukherjee
pranab mukherjee

By

Published : Dec 17, 2019, 2:20 PM IST

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் நினைவு தொடர்பான கருத்தரங்கம் டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில், முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், 17ஆவது மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையின் போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்க்கட்சியினர் அனைவரும் குற்றவாளிகள் என மக்களிடம் உண்மைக்கு புறம்பான கருத்தை முன்வைத்ததாக குற்றஞ்சாட்டினார்.

தேர்தல் வெற்றிக்குப் பின் பாஜகவுக்கு அறுதிப் பெரும்பான்மை இருப்பதால், எதை வேண்டுமானாலும் அமல்படுத்தலாம் என்ற சிந்தனை இருக்கக் கூடாது என்று குறிப்பிட்ட பிரணாப் முகர்ஜி, வாக்காளர்கள் ஒரு கட்சியை மட்டும் ஆதரித்த வரலாறு தமது நாட்டுக்கே கிடையாது என்றும், இதை அரசியல் கட்சிகள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், தற்போதுள்ள 543 மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை ஆயிரமாக உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: CAA Protest: 'குடியுரிமை திருத்தச் சட்டம் அரசியலமைப்புக்கு எதிரானது' - உச்ச நீதிமன்றத்தில் மனு

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details