தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விமானத்தில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகள்! - சுய அறிவிப்பு படிவம்

டெல்லி: மூன்று வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று சுய அறிவிப்பு படிவத்தைச் சமர்ப்பிக்கும் பயணிகளை மட்டும் விமானத்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

விமானத்தில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகள்!
விமானத்தில் பயணிக்க புதிய கட்டுப்பாடுகள்!

By

Published : Jul 13, 2020, 11:32 AM IST

நாடு முழுவதும் கரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, பல தளர்களுடன் வரும் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தளர்வுகளின் அடிப்படையில் மே 21ஆம் தேதிமுதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது. அப்போது, இரண்டு மாதங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று சுய அறிவிப்பு படிவத்தைச் சமர்ப்பிக்கும் பயணிகளை மட்டும் விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

நாடு முழுவதும் தற்போது ஏராளமான மக்கள் கரோனா வைரசிலிருந்து மீண்டுவருவதால், அவர்கள் விமானங்களில் பயணிக்க ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்கும் நோக்கில், சுய அறிவிப்பு படிவத்தைப் புதுப்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் அடிப்படையில், கடந்த சில நாள்களுக்கு முன்னர், மூன்று வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படவில்லை என்று சுய அறிவிப்பு படிவத்தைச் சமர்ப்பிக்கும் பயணிகளை மட்டும் விமானத்தில் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு, மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

கரோனா வைரசிலிருந்து மீண்டவர்கள், மூன்று வார நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தவர்கள் ஆகியோர் தங்கள் மருத்துவமனையிலிருந்து குணமடைந்து வெளியேறிய சான்றிதழைக் காட்டினால் விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்று அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் இதுவரை கரோனா வைரசால் பாதிக்கப்பட்டிருந்த சுமார் 8.2 லட்சம் பேரில், சுமார் 5.15 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தவர்களின் விகிதம் சுமார் 63 விழுக்காடாகும். கரோனாவால் 22,000க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details