கேரள அரசு ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு வங்கி சேவையை வழங்குவதற்கான நடவடிக்களை எடுத்துவருகிறது. ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் e-PoS இயந்திரங்கள் வைக்கப்பட்டு பணம் எடுத்தல், மற்றொரு வங்கி கணக்கிற்கு பணப் பரிமாற்றம் செய்யும் வசதிகள் செய்து தரப்படும் என்றும் இந்தச்சேவையை முழுக்க முழுக்க ஆதார் அட்டையை வைத்து பெறமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்காக , கூடிய விரைவில் பாரத ஸ்டேட் வங்கி, எச்டிஎப்சி, கோடாக் மகிந்திரா வங்கி, பாங்க் ஆஃப் பரோடா போன்ற வங்கிகளுடன் கேரள அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் போடவிருக்கிறது. மேலும், இந்தத் திட்டம் சோதனை முயற்சியாக திருவனந்தபுரம் மற்றும் எர்ணாகுளத்தில் தொடங்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.