தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பட்ஜெட் 2020-21: அல்வா கிண்டிய நிதி அமைச்சர்

டெல்லி: மத்திய நிதிநிலை அறிக்கை தயார் செய்யும் பணி தொடங்குவதற்கு முன் நடைபெறும் அல்வா கிண்டும் நிகழ்ச்சியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.

Government starts printing Budget documents with 'halwa' ceremony
Government starts printing Budget documents with 'halwa' ceremony

By

Published : Jan 20, 2020, 3:40 PM IST

ஆண்டுதோறும் மத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு சில நாள்களுக்கு முன், அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளதை இந்நிகழ்ச்சி உணர்த்தும். 2020-2021ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கை வரும் பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளதால் அல்வா கிண்டும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

நாடாளுமன்றத்தின் வடக்குப் பகுதியில் நடைபெற்ற அல்வா கிண்டும் விழாவில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதியமைச்சகத்தின் மற்ற உயர் அலுவலர்கள், எழுத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் தயாரிக்கப்படும் அல்வாவை நிதி அமைச்சர் ஊழியர்களுக்கு வழங்கினார். விழா முடிந்தபின் நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபடுவார்கள்.

சுமார் 10 நாள்கள் நடைபெறும் இந்தப் பணியின்போது, நிதிநிலை அறிக்கை தொடர்பான தகவல்கள் வெளியே கசிந்துவிடாமல் இருக்க அதைத் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள், தங்கள் குடும்ப உறுப்பினர்கள் உள்பட யாரையும் தொடர்புகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணியில் ஈடுபடும் ஒவ்வொரு ஊழியரின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் இந்த அல்வா கிண்டும் நிகழ்ச்சி நடைபெறும்.

இதையும் படிங்க: நிர்பயா வழக்கு: குற்றவாளியின் மனு தள்ளுபடி!

ABOUT THE AUTHOR

...view details