தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புத்தகம் வழங்காமல் தேர்வு துவக்கம் - புதுச்சேரி மாணவர் பெற்றோர் சங்கம் கண்டனம் - Pondy Government

புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் வழங்காமல் மாத தேர்வை தொடங்கியுள்ளது கண்டனத்துக்குரியது என்று புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து மாணவர்கள் பெற்றோர் சங்கம் தெரிவித்துள்ளது.

Students parents association

By

Published : Jun 26, 2019, 8:30 PM IST

புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு இன்னும் பாட புத்தகங்கள் முறையாக வழங்கப்படாமல் உள்ளது. இந்நிலையில் அரசுப் பள்ளி பயிலும் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு இன்று முதல் மாதத் தேர்வு தொடங்கியுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேச அனைத்து மைய மாணவர்கள் பெற்றோர் நலச்சங்கம் தலைவர் நாராயணசாமி, பொருளாளர் வி.சி.சி நாகராஜன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர், அப்போது அவர்கள் புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டேவருகிறது. இதற்கு முக்கிய காரணம் அரசு பள்ளிகளில் நிலவும் ஆசிரியர்கள் பற்றாக்குறையே ஆகும்.

ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஒரு பாடம் கூட நடத்தாமல் மாத தேர்வு நடத்தினால் எப்படி மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். அரசு பள்ளியில் தேர்ச்சிகள் நிலை என்னவாகும். மாணவர் சேர்க்கையை காரணம் காட்டி கிராமப்புறங்களில் அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், நகர பகுதியில் இயங்கும் அரசுப் பள்ளிகளை இழுத்து மூடும் நிலை உருவாகும்

இதே சமயத்தில் தனியார் பள்ளிகளில் புத்தகங்கள் வழங்கப்பட்டு பாடங்கள் முடிக்கப்பட்டுள்ளன. இது தனியார் பள்ளிகளை மறைமுகமாக ஊக்குவித்து அரசு பள்ளிகளை மூடும் நிலைக்கு தள்ளுவது போன்று உள்ளது. எனவே அரசு உடனடியாக ஆசிரியர்களை நியமித்து, ஏழை எளிய மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகாமல் பாதுகாக்க வேண்டும். இல்லையெனில் மூன்றாம் தேதி அன்று பெற்றோர்கள், மாணவர்கள் ,சமூக அமைப்புகள் அரசியல் கட்சிகளின் ஆதரவை பெற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தனர்.

ABOUT THE AUTHOR

...view details