தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சம்பா பருவ கொள்முதல் தொடங்கியது! - உணவு மற்றும் பொது விநியோகம் துறை

டெல்லி: சம்பா பருவம் தொடங்கியதையடுத்து சுமார் 3.57 லட்சம் விவசாயிகளிடமிருந்து 42.55 லட்சம் மெட்ரிக் டன் நெல், குறைந்தபட்ச ஆதரவு விலையில் வாங்கப்பட்டுள்ளதாக உணவு மற்றும் பொது விநியோகத்துறை தெரிவித்துள்ளது.

காரீஃப் பருவ கொள்முதல் தொடங்கியது!
காரீஃப் பருவ கொள்முதல் தொடங்கியது!

By

Published : Oct 13, 2020, 8:34 AM IST

இதுதொடர்பாக உணவு மற்றும் பொதுவிநியோகத் துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 'தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, குஜராத், ஹரியானா, உத்தரப்பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான் மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு 30.70 லட்சம் மெட்ரிக் டன் தானியங்கள், எண்ணெய் வித்துக்கள் , மாநிலங்களின் திட்டத்தின் அடிப்படையில் சம்பா பருவத்தில் கொள்முதல் செய்ய ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுக்கு 1.23 கோப்ரா (வற்றாத பயிர்) கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்வது பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் திட்டங்கள் பெறப்பட்ட பின்னர் வழங்கப்படும். 2020-21ஆம் ஆண்டிற்கான அறிவிக்கப்பட்ட எம்.எஸ்.பி-யில் பதிவுசெய்யப்பட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக அறுவடை காலத்தில் அந்தந்த மாநிலங்களில் நியமிக்கப்பட்ட சிறப்பு அலுவலர்கள் மூலம் சம்பா விளைபொருட்கள் கொள்முதல் செய்யப்படும்.

அக்டோபர் 11ஆம் தேதி நிலவரப்படி, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஹரியானாவில் உள்ள 533 விவசாயிகளிடமிருந்து ரூ.4.36 கோடி மதிப்புள்ள சுமார் 606.56 மெட்ரிக் டன் மூங், உராத் ஆகியவை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

மூங், பிற சம்பா பருவ பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்கள் ஆகியவற்றின் வருகையின் அடிப்படையில் கொள்முதல் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த மாநில அரசாங்கங்கள் தேவையான ஏற்பாடுகளை செய்து வருகின்றன' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details