உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளில் கோவிட்-19 வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால், பல்வேறு உயிரிழப்புகள் நிகழ்ந்துள்ளன. இதுவரை சுமார் ஒரு லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு கோவிட்-19 தொற்று உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இந்த பெருந்தொற்றால் இதுவரை ஆறாயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரை 126 பேர் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
ஒவ்வொரு நாடும் இந்த வைரஸை எதிர்கொள்ள பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதுபோல், இந்தியாவும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்கிது.