புதுச்சேரியில் மொத்தம் ஏழு அரசு கல்லூரிகள் செயல்படுகின்றன. இதில், எட்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவிகள் பயில்கின்றனர். இந்த அரசு கல்லூரிகளில் துணை பேராசிரியர்கள் 75 பேர் பணிபுரிந்து வருகிறார்கள். இவர்கள் 75 பேருக்கும், கடந்த 15 ஆண்டுகளாக தகுதி இருந்தும் பதவி உயர்வு, அரசு சார்ந்த எந்தவித சலுகைகளும் வழங்கப்படவில்லை.
புதுச்சேரியில் அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் - பதவி உயர்வு வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
புதுச்சேரி: பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசுக் கல்லூரி பேராசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரியில் அரசு கல்லூரி பேராசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
எனவே பதவி உயர்வு, அரசு சலுகைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் கலைக்கல்லூரி வளாகத்தில் துணை பேராசிரியர்கள் சங்கத்தின் தலைவர் சங்கர் தலைமையில் இன்று (செப்டம்பர் 3) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது, உடனே பதவி உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.