தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதுச்சேரியில் பேருந்துகள் இயக்கம் - புதுச்சேரியில் ஊரடங்கிற்குப் பின் இயக்கப்படும் பேருந்துகள்

புதுச்சேரி: ஐம்பது நாள்களுக்குப் பின்னர் சில வழித்தடங்களில் மீண்டும் மாநகரப் பேருந்துள் இயக்கப்பட்டன.

government buses running in puducherry after lockdown relaxation
government buses running in puducherry after lockdown relaxation

By

Published : May 20, 2020, 1:25 PM IST

புதுச்சேரியில் கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொது போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டிருந்தன. தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டதால் இன்று முதல் சில வழித்தடங்களில் மட்டும் மாநகரப் பேருந்துகளை இயக்க அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, முதல்கட்டமாக கோரிமேடு, நல்லவாடு, கொம்பாக்கம், வில்லியனூர், பிஎன் பாளையம் ஆகிய ஐந்து வழித்தடங்களில் மட்டும் புதுச்சேரி மாநில சாலை போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான அரசு மாநகர பேருந்துகள் இன்று இயக்கப்பட்டன. மக்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 21ஆம் தேதி முதல் புதுச்சேரி-காரைக்கால் இடைநில்லா பேருந்துகளும் இயக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: தனியார் பேருந்துகளுக்கு தொடங்கியது முன்பதிவு

ABOUT THE AUTHOR

...view details