டெல்லி: நிஜாமுதீன் மார்க்கஸில் நடந்த தப்லிஜி ஜமாத் நிகழ்வில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு மத்திய அரசும், டெல்லி காவல்துறையினரும் பொறுப்பேற்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தப்லிஜி ஜமாத் விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை! - Supriya Pandita
டெல்லியின் நிஜாமுதீன் மார்க்கஸில் நடந்த தப்லிஜி ஜமாத் நிகழ்வில் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனதற்கு மத்திய அரசும், டெல்லி காவல்துறையினரும் பொறுப்பேற்க முடியாது என்று வழக்கறிஞர் சுப்ரியா பண்டிதா தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மேலும் இவ்விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது.
Tablighi Jamaat
மேலும், இவ்விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை தேவைப்படாது என்று வழக்கறிஞர் சுப்ரியா பண்டிதா தாக்கல் செய்த பொதுநல மனுவுக்கு, நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
மார்ச் 13 அன்று, சுமார் 3400 பேர் மார்கஸில் கூடியிருந்தனர். மார்ச் 24ஆம் தேதி நாடு தழுவி பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகும், 1000 பேர் தனிநபர் இடைவெளியை பின்பற்றாமல், விதிமுறைகளை மீறி வளாகத்தில் தங்கியுள்ளனர். இது தொடர்பாக சிபிஐ விசாரணையையும் பண்டிதா கோரியிருந்தார்.