தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

விக்ரம் சாராபாயின் 100ஆவது பிறந்த நாளை நினைவுகூர்ந்த கூகுள் - doodle

இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை விக்ரம் சாராபாயின் 100ஆவது பிறந்த நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, விக்ரம் சாராபாயின் உருவத்தை டூடுளில் அமைத்து கூகுள் நிறுவனம் கவுரவித்துள்ளது.

கூகுள்

By

Published : Aug 12, 2019, 11:22 AM IST

கூகுள் டூடுல்

இந்த தலைமுறையினரை ஆட்டிப் படைக்கும் கூகுளின் பிரத்தியேகமான அம்சம் டூடுல். கூகுள் பக்கத்தினுள் சென்ற உடனே நெட்டிசன்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில் வரலாற்று நிகழ்வுகளை நினைவுகூறும் தேதிகள், உலக பிரபலங்களின் முகங்கள் என பல்வேறு முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கும் வகையில் டூடுல்கள் இடம்பெற்றிருக்கும்.

கூகுள் நிறுவனத்தின் தொடக்க காலகட்டத்தில் விடுமுறை தினங்களை மட்டுமே குறிவைத்து டூடுல்கள் வடிவமைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

விக்ரம் சாராபாய் டூடுல்

இன்று கூகுள் நிறுவனம் இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை விக்ரம் அம்பாலால் சாராபாய் அவர்களின் 100ஆவது பிறந்த நாளை கவுரவிக்கும் விதமாக டூடுல் வெளியிட்டுள்ளது.

யார் இந்த விக்ரம் சாராபாய்?

விக்ரம் சாராபாய், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 1919ஆம் ஆண்டு பிறந்தார். இவர் செல்வசெழிப்பான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், இயற்பியலின் மீது கொண்டிருந்த காதலால் தன் வாழ்நாள் முழுவதையும், ஆராய்ச்சியில் செலவிட்டார்.

விக்ரம் சாராபாய்

இவர், தான் இந்தியாவிற்கு விண்வெளி ஆராய்ச்சி மையம் ஒன்று தேவை என்பதை இந்திய அரசாங்கத்திற்கு எடுத்துரைத்தார். அப்போது இருந்த இந்தியாவிற்கு விண்வெளி ஆராய்ச்சி பற்றிய எந்தவொரு எண்ணமுமில்லை. விக்ரம் சாராபாய் 1962ஆம் ஆண்டு ’நேஷனல் கமிட்டி ஃபார் ஸ்பேஸ் ரிசர்ச் (Indian National Committee for Space Research) என்று அந்நாளில் அழைக்கப்பட்ட இஸ்ரோவை நிறுவி, முதல் விண்கல தளத்தை ’இந்திய அணுக்கருவியலின் தந்தை’ என அழைக்கப்படும் ஓமி யேகாங்கிர் பாபாவின் உதவியால் உருவாக்கினார்.

இந்தியாவின் முதல் செயற்கைக்கோள் ‘ஆர்யபட்டாவும் விக்ரம் சராபாயும்’

இந்தியாவின் முதல் செயற்கைக் கோளான ஆர்யபட்டாவை உருவாக்கியதில் விக்ரம் சாராபாயின் பங்கு மிகவும் முக்கியமானது. விக்ரம் சராபாய் இறந்த நான்கு வருடங்களுக்குப் பின்பே ‘ஆர்யபட்டா’ ரஷ்யாவின் உதவியுடன் விண்ணில் ஏவப்பட்டது.

இந்தியப் பெருமிதம் ‘இஸ்ரோ’

’இஸ்ரோ’ இன்று உலக அரங்கில் இந்தியாவை விண்வெளி ஆராய்ச்சியில் ஒளிரச் செய்து கொண்டிருக்கிறது. உலக வரலாற்றில் இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மட்டுமே மனிதர்களை நிலவுக்கு அனுப்பி ஆராய்ச்சி செய்துள்ளது. அந்த வரிசையில் இந்தியாவும் தற்போது தனது அசாத்திய தொழில் நுட்பத்தால் நிலவுக்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் களமிறங்கி உலக நாடுகளின் கவனத்தைத் திருப்பியுள்ளது.

விக்ரம் சராபாயை கவுரவித்த ‘சந்திராயன்’ ஆராய்ச்சியாளர்கள்

‘சந்திராயன் 2’வில் பொருத்தப்பட்டிருக்கும் லேண்டருக்கு விக்ரம் சராபாயின் நினைவாகத்தான் ‘விக்ரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது

தற்போது ‘சந்திராயன் 2’வில் பொருத்தப்பட்டிருக்கும் லேண்டருக்கு விக்ரம் சராபாயின் நினைவாகத்தான் ‘விக்ரம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details