தற்போது இருக்கும் ஆண்ட்ராய்டு காலக்கட்டத்தில் மொபைல் செயலிகள் (Moblie Apps) தவிர்க்க முடியாத காரணிகளாகும். அன்றாடம் செய்திகளை தெரிந்துகொள்ள, சமையல், உடற்பயிற்சி, வேலைவாய்ப்பு, பொழுதுபோக்கு, விளையாட்டு என அனைத்துவிதமான செயலிகள் இன்று அதிகம் பயன்படுகிறது.
நமக்குத் தேவையான செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் டவுன்லோட் செய்துகொள்ள முடியும். கூகுள் நிறுவனம் ஒவ்வொரு முறையும் புதுவிதமான அப்டேட்களை கொண்டுவரும் அந்த வகையில் கூகுள் பிளே ஸ்டோரில் குழந்தைகளுக்கான பிரத்யேக பிரிவு (Kids Section) அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த கிட்ஸ் பிரிவில் காணப்படும் செயலிகள் ஒவ்வொன்றும் ஆசிரியர்களால் மதிப்பிடப்பட்ட செயலிகள் ஆகும். முதற்கட்டமாக 60க்கும் மேற்பட்ட செயலிகள் கிட்ஸ் பிரிவில் கிடைக்கும். பின்னர் நாளடைவில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கும் என கூகுள் தெரிவித்துள்ளது.