உலகைப் பாதுகாக்கும் நோக்கிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் உலக பூமி தினம் இன்று கொண்டாடப்பட்டுவருகிறது. 1970ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் தேதி, அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கேலார்ட் நெல்சன் சுற்றுச்சூழல் விவகாரங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தொடங்கினார்.
இது மக்கள் இயக்கமாக மாற உலகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதனை நினைவுகூரும் விதமாகவே இன்று உலக பூமி தினம் கொண்டாடப்படுகிறது.